Friday, August 11, 2017
Bubble bee during pollination

130515173248_human_embryo_464x261_spl_no

Posted at 05:34 am by kuruvikal
Make a comment

Friday, July 19, 2013
Can cloning be effective and safe?!


Posted at 05:10 am by kuruvikal
Make a comment

Thursday, July 08, 2010
பச்சை பச்சை மனதை இதப்படுத்தும் பச்சை..!

மனிதன் கூர்ப்பின் பாதையில் கடந்து வந்த காலங்களில் அதிகம் பச்சைப் பசேல் என்ற இயற்கையையே அதிகம் கண்டு வந்ததாலோ என்னவோ பச்சைப் பசேல் என்ற இயற்கைச் சூழல், மனிதனில் ஏற்படுத்தும் மன அழுத்தத்தை (Stress) போக்க உதவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சிகளை தினமும் ரசிப்பதன் மூலம் மனதை இதப்படுத்தி மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடல்நலத்தை பேண முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மன அழுத்தமே மூளை, இதயம் (குறிப்பாக உயர் குருதி அழுத்தம்) சார்ந்த மற்றும் பல உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.படங்கள் : facebook (Thanks)

------------------

"A study suggests that spending time in green areas lowers stress levels. This could in part be due to our bodies being attuned to a more natural environment.

Posted at 01:12 pm by kuruvikal
Make a comment

Tuesday, October 14, 2008
உலகின் மிகப் பழமையான உயிரி கண்டுபிடிப்பு

தென்னாபிரிக்காவில் தங்கச் சுரங்கங்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியா ஒன்று, ஏனைய கோள்களில் காணப்படும் உயிரினங்கள் எவ்வாறு அங்குள்ள கடுமையான சுற்றாடலைத் தாக்குப்பிடித்து வாழுகின்றன என்பதற்கான துப்பை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பூமி மேற்பரப்பில் இருந்து 2.8 கிலோமீற்றர்கள் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ள உருளை வடிவமான Desulforudis audaxviator என்னும் இந்த உயிரினம் பிராணவாயு இல்லாமலேயே உயிர் வாழும் என்பதுடன், அது வாழும் இடத்தில் காணப்படுகின்ற ஒரே உயிரினம் இது மாத்திரமே - அதாவது - உயிர் வாழ்வதற்கு வேறு எந்த உயிரினத்தையும் இது சார்ந்திருக்கவில்லை.

ஒளியே இல்லாத இடத்தில் உயிர் வாழ்வதுடன், ஒரு உயிரி தானாகவே இனப்பெருக்கமும் செய்துகொள்கிறது.


கார்பன், நைட்ரஜன் போன்றவை மாத்திரமே இது உயிர் வாழ்வதற்கு தேவையானவையாகும்.

சக்திக்காக இது சூரியனில் சார்ந்திராமல் நீர், ஹைட்ரஜன் மற்றும் சல்பேட் ஆகியவற்றையே நம்பியிருக்கிறது.

தகவல்: பிபிசி/தமிழ் மற்றும் பிபிசி/ஆங்கிலம்.


Posted at 05:47 am by kuruvikal
Make a comment

Saturday, December 16, 2006
Circumcision எச் ஐ வி தொற்றலைக் கட்டுப்படுத்துகிறது

உலகெங்கும் பல மில்லியன் மனிதர்களைத் தாக்கியுள்ள எச் ஐ வி எனும் எயிட்ஸ் நோய்க்கான வைரஸின் தொற்றுகை சுன்னத்துச் (Circumcision) செய்யப்பட்ட ஆண்களில் குறைத்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்த போதும் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் பல தடவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.

சுன்னத்துச் செய்யப்பட்ட ஆண்களின் பாலுறுப்பின் முற்பகுதியில் உள்ள கலங்கள் உணர்வு குறைந்து போவதும் குருதி இழப்ப ஏற்படுவதைத் குறைக்கும் வகையில் தடிப்பாவதும் எச் ஐ வி வைரஸ் தொற்றுவதைத் குறைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்துக் கூறி உள்ள போதும், இவை இன்னும் சரி வர நிரூபிக்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவை நடைமுறைச் சாத்தியமாக்குவதில் சில சிக்கல்கள் இருப்பதுடன் இவ்வாய்வு முடிவு மீண்டும் பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளுக்கு மனிதர்களை இட்டுச் செல்லின் அது எச் ஐ வி பெருக்கத்தையே அதிகரிக்கச் செய்துவிடும் என்றும் அபாய எச்சரிக்கை செய்யப்படுகிறது.


Posted at 08:00 am by kuruvikal
Make a comment

Saturday, February 11, 2006
புதிய ஏவாளின் தோட்டம்..!

ஆய்வின் போது கண்டறியப்பட்ட தேன் குடிக்கும் புதிய இனப் பறவை..!

Papua 'Eden' என்று அழைக்கத்தக்க மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத ஒரு காட்டுப் பிரதேசத்தை அமெரிக்க,அவுஸ்திரேலிய, இந்தோனிசிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் பின்னர் கண்டறிந்துள்ளனர். வட - மேல் பப்புவா-நியுகினியா (இந்தோனிசியா) பகுதியில் அமைந்துள்ள Foja மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலையே அந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. மனித தாக்கம் இன்றி இன்றும் இயற்கை வனப்போடு இருக்கும் அந்த வனப்பகுதியில் வாழும் பல புதிய இன பறவைகளும் மற்றும் விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.


Posted at 03:42 pm by kuruvikal
Comments (1)

Friday, May 14, 2004
புகை என்றும் எங்கும் நமக்குப் பகை...!

காற்று மாசுபடுதலுக்கு பிரதான காரணமாக விளங்கும் அனல் மின்சார உற்பத்தி மையங்கள் வெளியிடும் புகைகள், டீசல் வாகனப்புகைகள், தொழிற்சாலை வாயு நிலைக்கழிவுகள் ஆகியவற்றில் பிரதானமாக அடங்கும் கரும்புகைக்கழிவுகளைச் (soot) சுவாசிப்பதால் அதில் உள்ள இரசாயனக் கூறுகள் பரம்பரை நோய்களை விளைவிக்கக் கூடிய பரம்பரை அலகு (DNA) மாற்றங்களை பெற்றோரினூடு சந்ததிக்கு ஏறப்படுத்துவதாக உருக்குத் தொழிற்ச்சாலைச் சூழல் ஒன்றில் எலிகளை வைத்துச் செய்த ஆய்வு முடிவென்று கூறுகிறது...!

இந்த ஆய்வின் பிரகாரம் குறித்த நோய்களை விளைவிக்கக் கூடிய சந்ததிகளில் அவதானிக்கப்பட்ட பரம்பரை அலகு மாற்றம் (Mutation) என்பது தந்தையின் விந்தில் உள்ள பரம்பரை அலகில் வாழும் காலத்தில் ஏற்பட்ட பரம்பரை அலகு மாற்றங்களாலேயே நிகழ்ந்திருப்பதாக அவ்வாய்வு தொடர்ந்து சொல்கிறது....! தந்தை எலிகளில் இந்த பரம்பரை அலகு மாற்றம் ஏற்படுவதற்கு அவை மாசடைந்த காற்றைச் சுவாசித்ததன் மூலம் உள்ளெடுத நுண்மையான,நச்சு இரசாயனப் பதார்த்தங்களே காரணம் என்றும் இவ்வாய்வு சந்தேகிக்கிறது...எனினும் இவ்வாய்வை மேலும் விருவாக செய்வதன் மூலமே சரியான காரணிகளை இனங்கானவும் தெளிவான முடிவுகளை எடுக்கவும் முடியும் என்று இவ்வாய்வைச் செய்த கனேடிய ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Posted at 11:48 am by kuruvikal
Make a comment

Monday, May 03, 2004
பூமிக்குக் காய்ச்சல்

பூமிக்குக் காய்ச்சல்...கடந்த சில பத்தாண்டுகளாக எமது பூமியின் வெப்பநிலை வழமைக்கு மாறான அதிகரிப்பைக் காட்டி வருகிறது...இதோ இந்தப் படத்தில் கடந்த ஆண்டில் (2003) உலகில் அதிக வெப்பம் பதியப்பட்ட ஆடி(July) மாதத்தில் உலகத் தரையமைப்பு வெப்பநிலை...இப்படம் செய்மதி ஆய்வுகளில் இருந்து பெறப்பட்டது...பட உதவியும் செய்தியும் நாசா (NASA)

Posted at 06:35 am by kuruvikal
Make a comment

Friday, April 30, 2004
போரும் கோரமும் தொடர்கதை...!


யுத்தம் பொது மக்களுக்கும் போர் வீரர்களுக்கும் உடனடிப் பாதிப்பை மட்டுமன்றி காலங்கடந்த பாதிப்புக்களையும் உண்டுபண்ணுகிறது....அமெரிக்க இராணுவத்தில் சேவை புரிந்த புரியும் வீரர்களில் சுமார் 60% மானோர் தசைகளையும் நரம்புகளையும் பாதிக்கக் கூடிய நோய் ஒன்றினால் சாதாரண பொது மக்களைவிட
மிக அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பைக் கொண்டிருக்கின்றனர் என்று சுமார் 400,000 அமெரிகக் வீரர்கள் மத்தியில் ஒன்பது ஆண்டுகளாக செய்த ஆய்வொன்று எடுத்துக் காட்டி உள்ளது...!

(The nerve disorder, known as) Amyotrophic lateral sclerosis (ALS) என்று அழைக்கபப்டும் இந்த நோய்க்கான உண்மையான காரணி என்ன என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் போர்த்தளபாடங்களில் பாவிக்கப்படும் வேறுபட்ட நச்சு இரசாயனப்பதார்த்தங்கள் கொண்டிருக்கும் கூறுகளே இதற்கு முக்கிய காரணமாக அறியப்படுகின்றன...(உதாரணத்துக்கு போர்வீரர்கள் செயற்பட்ட சில சூழல் காரணிகளாக ஈயத்தின் பங்களிப்பும் வைரசுக்களின் தாக்கமும், மேலதிக பலமான பயிற்சியும் சுட்டிக்காட்டப்படுகின்றன..)..அவை எவை என்பது தெளிவாக இனங்காணப்படவில்லையாயினும் வளைகுடாப் போரின் போது ஒரு வகை இரசாயனத்துக்கு முகங்கொடுத்த வீரர்களில் ஏற்பட்ட வளைகுடாப் போர் பல் வகை நோய் அறிகுறி (Gulf War syndrome) எனும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயைப் போல் இதுவும் போர் வீரர்களை அவர்கள் எங்கு செயற்பட்டிருப்பினும் இராணுவ ஆயுத தளபாடங்களின் பாவிப்பால் வெளியிடப்படும் இரசாயனக் கூறுகளிற்கு முகங்கொடுத்திருப்பின் பாதிப்பிற்கு உள்ளாகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...!

Posted at 05:38 pm by kuruvikal
Make a comment

Thursday, January 08, 2004
நட்சத்திரம் ஒன்றைச் சுற்றிக் காணப்படும்

sorry- picture invalid now.

-kuruvikal(2013)

Posted at 03:22 pm by kuruvikal
Make a comment


Next Page

   
<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:


BlogdriveBlogdrive